படிக்காதவன் படத்தில் நடித்த குட்டி ரஜினி யார் தெரியுமா?.. இந்த நடிகையோட முன்னாள் கணவரா..

105

 

ரஜினிகாந்த் – சிவாஜி கணேசன் இணைந்து நடித்து படிக்காதவன் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தில் குட்டி ரஜினியாக வந்த சிறுவனை யாராலும் அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியாது.

ரஜினியின் இளம் வயதில் நடித்த அந்த சிறுவன் வேற யாரும் இல்லை அது மாஸ்டர் சுரேஷ் தான். இவருடைய இயற்பெயர் சூரிய கிரன்.

மாஸ்டர் சுரேஷ், ரஜினி படங்கள் மட்டுமின்றி கமல், விஜயகாந்த், பிரபு, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, அமிதாப் பச்சனுடன் இணைந்து மொத்தம் 200 படங்களில் நடித்து இருக்கிறார்.

நடிகர் மாஸ்டர் சுரேஷ், சமுத்திரம் என்ற படத்தில் சரத்குமாருக்கு சகோதிரியாக நடித்த காவேரியை திருமணம் செய்து கொண்டார். அதன் பின் சில கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

மேலும் மாஸ்டர் சுரேஷ், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் அண்ணண் ஆவார்.

SHARE