நடிகர்களின் பிறந்தநாள் அன்று, அவர்களின் முந்தைய படங்களை ரீ-ரிலீஸ் செய்வது தற்போது வாடிக்கையாகிவிட்டது. அஜித், விஜய் தொடங்கி தற்போது சூர்யாவின் பிறந்தநாளுக்கு அது நடக்கவுள்ளது.
கேரளாவில் உள்ள ரசிகர்கள் சூர்யாவின் பிறந்தநாளான ஜூலை 23ம் தேதி அன்று அஞ்சான் படத்தை மீண்டும் திரையிட்டு கொண்டாடவுள்ளனர்.
“நான் கத்துகிட்ட மொத்த வித்தையையும் இந்த படத்தில் இறக்கியிருக்கிறேன்” என லிங்குசாமி பில்டப் கொடுத்த அளவுக்கு படம் இல்லாததால் ரசிகர்கள் இந்த படத்தை சமூக வலைத்தளங்களில் கலாய்த்து தள்ளியது குறிப்பிடத்தக்கது.
இப்படி படுதோல்வி அடைந்த படத்தையும் மலையாள ரசிகர்கள் ஆதரிப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை தந்துள்ளது.