கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்த ஒரு தொகுதி காணிகள் பொதுமக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.
கிளி நகரம், மலையாளபுரம்,கிருஷ்ணபுரம் ஆகிய கிராம அலுவலர் பிரிவுகளில் உள்ள காணிகள் இவ்வாறு விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் பிரதேச செயலாளர் முகுந்தனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.