படையினர் எல்லா நேரத்திலும் ஆயத்தமாகவே இருக்கின்றார்கள் என இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவம் 66ம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை இராணுவத்தினரின் ஒழுக்கம், மனிதாபிமானம் மற்றும் நேர்மைத்தன்மை குறித்து உலக நாடுகள் பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
நீண்ட காலமாக இலங்கை இராணுவம் தொழில்சார் தன்மையை வெளிப்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை இராணுவத்திற்கு சர்வதேச ரீதியில் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும். ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் பணிகளில் படையினர் அதிகளவில் சேவையில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.