படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவி சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும்?

277
முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 9ம் திகதி சரத் பொன்சேகா நாடாளுமன்ற உறுப்பினராக, சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் அமைச்சரவை அந்தஸ்துடைய படைவீரர் நலன்புரி அமைச்சராக சரத் பொன்சேகா நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.

அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் மறைவினால் ஏற்பட்ட தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு சரத் பொன்சேகா நியமிக்கப்பட உள்ளார்.

சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட உள்ளதாகவும் சில ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டிருந்தன.

எனினும், படைவீரர் நலன்புரி அமைச்சுப் பதவியே சரத் பொன்சேகாவிற்கு வழங்கப்படும் என கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

sarath-fonseka1

SHARE