பட்ஜெட் 650 கோடி தான், ஆனால் 3 நாள் வசூல் இவ்வளவா

186

X-மேன் படங்களில் வுல்வெரீனின் கடைசி படமான லோகன் சென்ற வாரம் வெளியானது. வெளியான மூன்று நாட்களில் மட்டும் இந்த படம் 1500 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. அமெரிக்காவில் 569 கோடி, சீனாவில் 308 கோடி, இங்கிலாந்தில் 76 கோடி இந்த வசூலில் அடங்கும்.

படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் 650 கோடி ரூபாய் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

படத்தை தயாரித்த fox நிறுவனத்தின் பயணத்தில் இது மூன்றாவது பெரிய ஓப்பனிங். வரும் நாட்களில் லோகன் இன்னும் பல பாக்ஸ்ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE