சில தினங்களுக்கு முன் தல-56 படத்தின் வியாபாரம் குறிப்பிட்ட மாவட்டத்தில் மட்டும் முடிந்ததாக நாம் கூறியிருந்தோம். சமீபத்தில் வந்த தகவலின் படி தமிழகத்தின் அனைத்து ஏரியாக்களிலும் படம் விற்று விட்டதாம்.
சென்னை ஏரியாக்களின் லதீஃப் நிறுவனம் வாங்க, செங்கல்பட்டு ஏரியாவின் வெளியீட்டு உரிமையை எம்.கே.எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளதாம்.
இதுமட்டுமின்றி மதுரை, கோவை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர் ஆகிய ஏரியாக்களை சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதில் இது வரை வந்த அஜித் படங்களில் இவை தான் அதிக தொகைக்கு விலைப்போன படம் என கூறப்படுகின்றது.