
டிரெய்லரை பார்த்ததும் இந்த நல்ல நேரத்தில் அம்மா இல்லையே என்று குஷி மேடையிலேயே அழத்தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறிய ஜான்வியும் கண்கலங்கினார். இதை பார்த்த கூட்டத்தினரும் சோகமானார்கள். விழாவில் ஜான்வி பேசும்போது, “மராத்தியில் வெளியான சாய்ரட் படத்தை எனது அம்மா ஸ்ரீதேவி பார்த்து விட்டு இதுபோன்ற ஒரு நல்ல படத்தில்தான் நீ கதாநாயகியாக அறிமுகமாக வேண்டும் என்றார். அதிர்ஷ்டவசமாக அந்த படத்தின் இந்தி ரீமேக்கில் நடிக்கவே எனக்கு வாய்ப்பும் வந்தது. படத்தில் எப்படி நடிக்க வேண்டும். முகத்தில் உணர்வுகளை எப்படி பிரதிபலிக்க வேண்டும் என்றெல்லாம் அவர் ஆலோசனைகள் கூறினார். இந்த நல்ல நேரத்தில் எனது அம்மா இல்லையே என்று நினைக்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது” என்றார்.
படத்தின் டிரெய்லரை பார்த்து போனிகபூரின் முதல் மனைவியின் மகனும் நடிகருமான அர்ஜுன்கபூர் வெளிநாட்டில் இருந்து ஜான்விக்கு வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தி நடிகர்-நடிகைகள் பலரும் வாழ்த்திய வண்ணம் உள்ளனர்.