பணத்தை துரத்தும் வில்லன், அவனை துரத்தும் ஹீரோ -தனி ஒருவன் சிறப்பு பார்வை

334

ஜெயம் ரவி ரோமியோ ஜுலியட்டில் தன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிவிட்டார். 2 மாதம் முடிவதற்குள் தன் 3வது படமான தனி ஒருவனை இந்த வாரம் களம் இறக்கவுள்ளார்.

ஆனால், சாதரணமாக இல்லை, எப்போதும் சொல்லி அடிக்கிற பந்தய குதிரை ஜெயம் ரவி-ராஜா கூட்டணி. இவர்கள் கூட்டணியில் 6வது முறையாக இணைந்துள்ளனர். இதில் அப்படி என்ன ஸ்பெஷல் என்றால் அரவிந்த் சாமி தான்.

90களில் பெண்களின் மனதை கொள்ளையடித்து சாக்லேட் பாயாக வலம் வந்த இவர், இன்றைய ட்ரண்டின் சாக்லேட் பாய் ஜெயம் ரவிக்கு வில்லனாக நடித்துள்ளார். பணம், பதவிக்காக ஓடும் ஒரு வில்லன். அவன் கெட்டது செய்ய எந்த அளவிற்கு ஆசைப்படுவானோ, அதைவிட அதிகமாக நல்லது செய்வதற்கு பேராசை படும் ஹீரோ ஜெயம் ரவி.

இவர்கள் இருவருக்குமிடையேயான ஆடுபுலி ஆட்டம் தான் இந்த தனி ஒருவன். இப்படத்தில் முதன் முறையாக ஜெயம் ரவியுடன் நயன்தாரா நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய இளைஞர்களின் பல்ஸ் தெரிந்த இசையமைப்பாளர் ஹிப் ஆப் தமிழன் ஆதியின் பாடல்கள் ஏற்கனவே பட்டையை கிளப்ப, தற்போது எல்லோரும் பின்னணி இசை எப்படியிருக்கும் என்பதில் தான் ஆவலாக இருக்கின்றனர்.

இப்படம் ஜெயம் ரவியின் திரைப்பயணத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக திரையரங்குகளில் ரிலிஸ் ஆகவுள்ளது. இப்படக்குழுவினர்களுக்கு சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.

SHARE