பணிபகிஸ்கரிப்பின் காரணமாக 15 இலட்சம் கடிதங்கள் தேங்கியுள்ளது!

268

தபால் சேவை ஊழியர்கள் மேற்கொண்டுள்ள அடையாள பணிபகிஸ்கரிப்பின் காரணமாக நேற்று நாடுமுழுவதும் 15 இலட்சம் கடிதங்கள் தேங்கிக் கிடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பதவி உயர்வு, ஆட்சேர்ப்பு மற்றும் ஊதியம் உள்ளிட்ட 7 விடயங்கள் குறித்து திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள பணிபகிஸ்கரிப்பில் நாடுமுழுவதுமுள்ள தபால் சேவை ஊழியர்கள் ஈடுபட்டள்ளனர்.

இந்த நிலையில், நேற்று நாடுமுழுவதும் தபால் சேவை முடங்கியதால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்தனர்.

மேற்படி கோரிக்கைகளை முன்வைத்து சம்பந்தப்பட்ட அமைச்சருடன் நடத்திய கலந்துரையாடலில் தீர்வு கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டே இந்த அடையாள பணிபகிஸ்கரிப்பில் தபால் சேவை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், தமது கோரிக்கைகளுக்கு இன்னும் 14 நாட்களுக்கு தீர்வு கிடைக்கவில்லையாயின் தொடர் தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு தயார் என தபால் சேவை ஊழியர்கள் சங்கத்தினர் எச்சரித்துள்ளனர்.

SHARE