குவைட் நாட்டிற்கு பணிப்பெண்களாக சென்ற இரண்டு இலங்கை பெண்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
வெல்லம்பிடிய மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் இருந்து குவைட் நாட்டிற்கு பணிபுரிவதற்காக சென்ற பெண்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெல்லம்பிடிய – வதுல்லவத்தை பிரதேசத்தை சேர்ந்த 38 வயதுடைய முனிசாமி மாரன்னன் கௌரி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரும், சிலாபம் – முகுணுவடுவன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
முனிசாமி மாரன்னன் கௌரி என்ற பெண் வறுமை காரணமாக தமக்கான வீடொன்றை நிர்மாணிக்கும் நோக்குடனே குவைட் நோக்கி சென்றதாக உறவினர்கள் கூறியுள்ளனர்.
இதேவேளை, இலங்கை பெண்கள் உயிரிழந்த சம்பவங்கள் சந்தேகத்திற்கிடமானது எனவும் அவர்களின் உறவினர்கள் கூறியுள்ளனர்.