பண்டிகைக காலத்தில் 1000 மேலதிக பஸ்களை சேவையில் ஈடுபடுத்தவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 31 ஆம் திகதி வரை இந்த பஸ்கள் சேவையில் ஈடுபடும் என்பதோடு விசேட போக்குவரத்து சேவைகளும் இடம்பெறும் என இந்த சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்து சபையில் சேவையாற்றுகின்ற அனைத்து சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறைகள் இரத்துச் செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பண்டிகைக்காலத்தில் விசேட ரயில் சேவைகளும் இடம்பெறும் என ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.