பண மோசடி பெண் கைது

271

நூற்றுக்கு 30 வீதம் வட்டி பெற்றுத் தருவதாகக் கூறி சுமார் 50 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் பெண்  ஒருவரை  கட்டுகாஸ்தோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கட்டுகாஸ்தோட்டையை அண்மித்த பிரதேசத்தில் வசிக்கும் சுமார் 50 வயதுள்ள மேற்படி பெண் தான் ஒரு வியாபாரத்தில் முதலீடு செய்வதற்கு  பணம் திரட்டுவதாகவும்   அவ்வாறு திறட்டப்படும் பணத்திற்கு நூற்றுக்கு 30  வீதம் மாத வட்டி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனை நம்பிய  சிலர் அவரிடம் 50,000 ரூபா முதல் ஆறு இலட்சம் ரூபா வரை பணத்தை கொடுத்துள்ளனர்.

இவ்வாறு அவர் பணம் பெற்றும் தமக்கு எதுவித இலாபமும் வழங்காது காலம் கடத்தியதால் முதலும், வட்டியும் இன்றி பணம் கொடுத்தவர்கள் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணைகளை மேற் கொண்ட பொலீஸார் குறித்த பெண்ணை கைது செய்துள்ளதுடன் அவரை கண்டி நீதிவான் முன் ஆஜர்படுத்தியபோது அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்திரவிட்டார்.

SHARE