பதவிகளில் மீளவும் அமர்த்தப்பட்ட படையினர் இராணுவத் தளபதி கிருஸாந்த டி சில்வாவை சந்திக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு கட்டாய ஓய்வு மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட 40ற்கும் மேற்பட்ட படை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் மீளவும் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
201 படைஅதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களின் பெயர் பட்டியலிலிருந்து 40க்கும் மேற்பட்டவர்களை மீளவும் பணியில் அமர்த்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
படையினரை மீளவும் பணியில் அமர்த்துவது தொடர்பிலான விசேட சுற்று நிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளது.