பதவிக்காகவும், பணத்திற்காகவும் விலைபோகும் த.தே.கூட்டமைப்பின் அரசியல்வாதிகள்

248

நல்லிணக்க அரசியல் என்கின்ற போர்வையில் அரசினால் தமிழ் இனத்திற்கு எதிராக நிழல் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது எனலாம். அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒரு குடையின் கீழ் இணைந்து செயற்படுவதையே இந்த அரசாங்கம் விரும்புகின்றது. அதனொரு செயற்பாடாகவே பாராளுமன்றத்திலும் ஒரு பேரவையினை இந்த அரசாங்கம் உருவாக்கியுள்ளது. அதில் 07 உப தலைவர்கள் கொண்ட குழுவில் த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வழிநடத்தல் குழுவில் இரா.சம்பந்தனும் அங்கம் வகிக்கின்றனர்.

UxYiihd

இவ்விபரங்களைப் பார்க்கின்றபோது,

உப தலைவர்கள்
01. திலங்க சுமதிபால
02. செல்வம் அடைக்கலநாதன்
03. கபீர் ஹாசிம்
04. சுதர்ஷினி பெர்ணான்டோ புள்ளே
05. திலக் மாரப்பன
06. மஹிந்த யாப்பா அபேவர்தன
07. நலிந்த ஜயதிஸ்ஸ

வழிநடத்தல் குழு
01. ரணில் விக்கிரமசிங்க
02. லக்ஷமன் கிரியெல்ல
03. நிமல் சிறிபால டி சில்வா
04. ரவூப் ஹக்கீம்
05. விஜயதாஸ ராஜபக்ஷ
06. சுசில் பிரேமஜயந்த
07. ரிஷாட் பதியுதீன்
08. சம்பிக்க ரணவக்க
09. டி.எம். சுவாமிநாதன்
10. மனோ கணேசன்
11. மலிக் சமரவிக்கிரம
12. இரா.சம்பந்தன்
13. அநுரகுமார திஸாநாயக்க
14. டிலான் பெரேரா
15. தினேஷ் குணவர்தன
16. ஜயம்பதி விக்கிரமரட்ண
17. எம்.ஏ. சுமந்திரன்
18. துஷிதா ஜயமன்ன
19. பிமல் ரத்னாயக்க
20. பிரசன்ன ரணதுங்க
21. டக்ளஸ் தேவானந்தா என்கின்ற அடிப்படையில் இடம்பெற்றிருக்கின்றனர்.

இவ்வாறானதொரு குழுவினை நியமித்து அக்குழுவின் ஊடாகவே தீர்மானங்களை நிறைவேற்றமுடியும். தன்னிச்சையாக அரசியல் தீர்மானங்களை நிறைவேற்றுவது என்பது மிகக்கடினமாகவே இருக்கும். ஏற்கனவே அரசிற்கு விலைபோயுள்ள இரா.சம்பந்தன், சுமந்திரன், சரவணபவான், சிறிதரன், சிவமோகன் போன்ற முன்னணி பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சுயநல அரசியலுக்காக அன்று ஒரு பேச்சும் இன்று ஒரு பேச்சுமாகவே செயற்பட்டு வருகின்றனர்.

தேர்தல் காலங்களில் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை எனப்பேசியவர்கள் இன்று அரசுடன் இணைந்து இணக்கப்பாட்டு அரசியலில் ஈடுபடுவது வேதனைக்குரிய விடயம். தனது பதவியைத் தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்வதற்காக ஈ.பி.ஆர்.எல்.எப் வழங்கிய ஆசனத்தினால் பாராளுமன்றத்திற்குள் பிரவேசித்த சிவமோகன் அவர்கள் இன்று தமிழரசுக்கட்சி என்ற போர்வையினை போர்த்திக்கொண்டு தனது அரசியல் சுயலாபத்திற்காக செயற்படுகின்றார் எனக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இதுபோன்று மேற்குறிப்பிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தேசியம் பேசிவிட்டு இன்று சாக்கடைக்குள் விழுந்த கதையாகவே அவர்களது அரசியல் பயணங்கள் தொடர்கிறது. பதவிகளை வழங்குவதன் ஊடாக எந்தக்காலத்திலும் இவ்வரசினை விட்டு விலகிப்போகாமல் தற்போதைய மைத்திரி-ரணிலினது கூட்டரசாங்கம் செயற்பட்டு வருகின்றது. பதவிக்கும் பணத்துக்கும் சோரம் போவதாக த.தே.கூட்டமைப்பு செயற்படுமாகவிருந்தால் தமிழ் மக்களுடைய எதிர்காலம் கேள்விக்குறியாக மாற்றப்படும் என்பதில் எவ்வித சந்தேகங்களுமில்லை.

SHARE