பதவியை ராஜினாமா செய்த இராணுவ தளபதி

150

பிரான்ஸ் நாட்டின் ஜனாதிபதியான இம்மானுவேல் மேக்ரானுக்கும் அந்நாட்டு இராணுவ தளபதிக்கும் இடையே பனிப்போர் தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து தற்போது இராணுவ தளபதி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சரான Gerald Darmanin கடந்த 11-ஆம் திகதி ஜனாதிபதி இம்மானுவேல் மேக்ரானுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

அப்போது, பொருளாதாரத்தை மேம்படுத்த செலவுகளை குறைக்க வேண்டும் என ஆலோசனை வழங்கியுள்ளார்.

அதைத் தொடர்ந்து இமானுவேல் மேக்ரான் இராணுவத்திற்கு ஆயுதங்கள் வாங்குவதில் செலவிடப்படும் நிதியில் இருந்து 979 மில்லியன் டொலர் வரை குறைப்பதாக அறிவித்தார்.

இந்நிலையில் அந்நாட்டு இராணுவ தளபதியான Pierre de Villiers தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், குறைந்த நிதியைக் கொண்டு இராணுவத்தின் பலத்தை தொடர முடியாது என்றும் நாட்டு மக்களின் பாதுகாப்பு எனபது அரசின் மிக முக்கிய கடமை என தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்திற்கான செலவை தேவையற்றதாக கருதக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

SHARE