பதுளை- கொழும்பு பிரதான வீதியில் பாரிய மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த அனர்த்தம் நேற்றிரவு (09.01.2024) உடுவர ஹத்த கன்வன்வ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், அனர்த்தம் காரணமாக குறித்த பகுதியில் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாற்று வீதி
எனினும் தற்போது பதுளையில் இருந்து உடுவர வரையிலும், பண்டாரவளையில் இருந்து உடுவர வரையிலும் பேருந்து சேவைகள் நடைபெறுவதாக பொலிஸார் தகவல் வழங்கியுள்ளனர்.
எனினும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு அடம்பிட்டிய பண்டாரவளை வீதியை மாற்று வழியாக பயன்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.