பதுளை ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

317

 

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை நகரில் உள்ள ஸ்ரீ மாணிக்க விநாயக கதிர் வேலாயுத சுவாமி ஆலயத்தில்  இடம்பெற்ற தீர்த்தோற்சவத்தில் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 15ம் திகதி சனிக்கிழமை கொடியேற்றதுடன் ஆரம்பமாகியது. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற பால்குட பவனியையடுத்து அலங்கார தேர்திருவிழா வீதி வலம் பதுளை நகர வீதியில் இடம்பெற்றது.  இந்த நிகழ்ச்சிகள் அனைத்திலும் அதிக எண்ணிக்கையான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.

                                                                                                                                                            (க.கிஷாந்தன்)

 

SHARE