நாட்டின் பத்திரிகைகளின் முதல் பக்கங்கள் நாட்டை அழிக்கும் வகையில் செயற்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல வோட்டர்ஸ்எட்ஜ் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
நாட்டின் பத்திரிகைகளின் முதல் பக்கத்தில் பிள்ளைகளுக்கு, அரச அதிகாரிகளுக்கு அல்லது மக்களுக்கு தேவையான விடயங்கள் பிரசூரிக்கப்படுவதில்லை.
இலங்கையின் ஊடகக் கலை உலகின் எந்தவொரு நாட்டிலும் இல்லாத அரசியல் சிந்தனையுடன் செயற்படுகின்றது.
பத்திரிகைகள் நாட்டை கட்டியெழுப்பும் ஆக்கபூர்வமான காரணி என்ற போதிலும் தற்போது பத்திரிகைகளின் முதல் பக்கங்களை பாலியல் வன்கொடுமை, கொள்ளைகள், கொலைகள் மற்றும் அரசியல் முரண்பாட்டு நிலைகள் என்பனவே அலங்கரிக்கின்றன.
நாட்டைக் கட்டியெழுப்பும் போது ஊடகங்களின் பங்களிப்பு குறைத்து மதிப்பிடக்கூடியதல்ல என அவர் குறிப்பிட்டுள்ளார்.