பத்துவயதுப் பாலகியிடம் பாலியல் சேஷ்டை! பயிற்சியில் இருந்த எஸ்.ஐ. கைது

273
பத்து வயதுப் பாலகியொருத்தியிடம் பாலியல் சேஷ்டையில் ஈடுபட்ட பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பை அண்மித்த கட்டான பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

இங்குள்ள பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர்களுக்கான பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி பெறும் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் அருகிலுள்ள வீடொன்றில் இருந்த சிறுமியிடம் பாலியல் சேஷ்டையில் ஈடுபட முனைந்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்த தகவலுக்கமைய பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த சப்இன்ஸ்பெக்டர் கைது செய் யப்பட்டுள்ளார்

பத்து வயது நிரம்பாத பாலகியொருவரிடம் பட்டப்பகலில் பொலிஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரே பாலியல் சேஷ்டையில் ஈடுபட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SHARE