பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணக்கம்?

268

பத்து அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாக அத்தியாவசிய சில்லறை பண்ட வர்த்தகர் சங்கத்தின் தலைவர் பந்துல ஜயமான்ன தெரிவித்துள்ளார்.

நெத்தலி, பருப்பு, சீனி, கோதுமை, மா, பயறு, கொத்தமல்லி, மாசி, மஞ்சள் தூள், காய்ந்த மிளகாய் மற்றும் உழுந்து போன்றவற்றுக்கான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசாங்கம் இணங்கியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறெனினும், அத்தியாவசிய பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் பற்றி தமக்கு அறிவிக்கப்படவில்லை என நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் ஹசித திலகரட்ன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சு இது பற்றி அறிவிக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

vegetable

SHARE