பத்மஸ்ரீ விருதிற்கு நான் தகுதியானவன் தானா?

279

பாகுபலி எனும் பிரமாண்ட படத்தை எடுத்து, உலக சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் ராஜமௌலி. இந்திய அளவில் வசூல் சாதனை படைத்த இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார் அவர்.

ராஜமௌலியின் படைப்பாற்றலை போற்றும் விதமாக இந்திய அரசு அவருக்கு நேற்று பத்மஸ்ரீ விருது அறிவித்துள்ளது. இந்த உயரிய விருது தனக்கு கிடைத்துள்ளது பற்றி அவர் ட்விட்டரில் தெரிவித்த கருத்து அனைவரையும் ஆச்சர்யபடவைத்துள்ளது.

“இந்த விருதிற்கு நான் தகுதியானவன் என்று தோன்றவில்லை. அப்படி என்ன சாதனை செய்துவிட்டேன். ரஜினி மற்றும் ராமோஜி ராவ் ஆகியோருக்கு பத்மவிபூஷன் கொடுத்ததில் அர்த்தம் உள்ளது.” “அதே சமயம் பத்மஸ்ரீ கிடைத்ததில் மகிழ்ச்சி” எனவும் கூறியுள்ளார்.

SHARE