அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் குசால் பெரேரா கிரீஸை விட்டு வெளியேறியதை மிட்செல் ஸ்டார்க் இருமுறை எச்சரித்தார்.
அவுஸ்திரேலியா – இலங்கை மோதல்
லக்னோவில் உலகக்கோப்பையின் 14வது போட்டியில் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் மோதி வருகின்றன.இரு அணிகளுமே இன்னும் முதல் வெற்றியை பெறாததால் இப்போட்டிக்கு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்த நிலையில் பந்துவீச்சை தெரிவு செய்த இலங்கை அணி துடுப்பாட்டத்தை தெரிவு செய்து விளையாடி வருகிறது.
பதும் நிசங்கா மற்றும் குசால் மெண்டிஸ் இன்னிங்சை தொடங்கினர். இந்த கூட்டணி 18 ஓவர்களில் 100 ஓட்டங்களை கடந்தது.
மிட்செல் ஸ்டார்க்
நிலைத்து நின்று ஆடி வரும் குசால் பெரேரா இருமுறை அவுட் ஆவதில் இருந்து தப்பினார். அவர் மிட்செல் ஸ்டார்க் ஓவரில் பந்துவீசும் முன்பே கிரீஸை விட்டு வெளியேறினார்.
இதனை கவனித்த ஸ்டார்க் பந்துவீசாமல் நின்று ஸ்டம்பை பார்த்தார். ஆனால் அவர் பெரேராவை அவுட் செய்யவில்லை. மாறாக எச்சரிக்கை மட்டுமே கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மீண்டும் ஒருமுறை பெரேரா அதேபோல் கிரீஸை விட்டு வெளியேறினார். இம்முறையும் ஸ்டார்க் அவரை மான்கட் முறையில் அவுட் செய்யாமல் எச்சரிக்கை செய்தார்.
எதிரணி வீரரை அவுட் செய்யும் வாய்ப்பு இருந்தும், அதனை பயன்படுத்தாமல் பெருந்தன்மையுடன் நடந்துகொண்ட ஸ்டார்க்கை கிரிக்கெட் ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.