பந்துவீச்சால் இலங்கை வீரர்களை மிரட்டிய ஆண்டர்சன்

332

625.117.560.350.160.300.053.800.210.160.90 (2)இங்கிலாந்து- இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் லீட்ஸ் மைதானத்தில் நடந்தது.

முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 298 ஓட்டங்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய இலங்கை அணி ஆண்டர்சன் வேகத்தில் தாக்குபிடிக்க முடியாமல் 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பாலோ ஆன் பெற்றது.

அபாரமாக பந்துவீசிய ஆண்டர்சன் 5 விக்கெட்டும், பிராட் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

207 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 2ம் ஆட்ட நேர முடிவில் 1 ஓட்டத்திற்கு விக்கெட் இழப்பின்றி இருந்தது.

இந்நிலையில் 3ம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இதிலும் ஆண்டர்சன் வேகத்தால் இலங்கை வீரர்கள் தடுமாறினர்.

கருணாரத்னே (7), சில்வா (14) ஆண்டர்சன் வேகத்தில் வெளியேறினர். மெண்டிஸ் அரைசதம் (53 ஓட்டங்கள்) அடித்து ஆண்டர்சன் பந்தில் ஆட்டமிழந்தார். திரிமன்னே 16 ஓட்டங்கள் எடுத்தார்.

மற்ற வீரர்கள் அனைவருமே ஒற்றை இலக்க ஓட்டங்களில் சுருண்டனர். அட்டகாசமாக பந்துவீசிய ஆண்டர்சன் 2வது இன்னிங்சிலும் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதன் மூலம், இலங்கை அணி 35.3 ஓவரில் 119 ஓட்டங்களில் ஆட்டமிழந்து, 88 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்றது. 10 விக்கெட் வீழ்த்திய ஆண்டர்சன் ஆட்ட நாயகன் விருது வென்றார்.

SHARE