சுவிஸ் காலநிலையில் ஏற்பட்டுள்ள அதிரடி மாற்றத்தினால் நாட்டின் கிழக்கு பகுதியில் பல நகரங்கள் பனியில் மூழ்கியுள்ளது.
நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள செயின்ட் கலென் நகரம் முழுவதும் பனியால் மூழ்கியுள்ளது.
ஏப்ரல் மாத இறுதியில் இதுபோன்ற ஒரு பனி பொழிவை பார்த்ததே இல்லை என அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். செயின்ட் கலென் பகுதியில் 30 செ.மீ. படந்துள்ளதாக கூறப்படுகிறது.
செயின்ட் கலென் நகரன் பிரதான சாலைகள் அனைத்தும் பனியால் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கலென் நகரன் பிரதான சாலைகளில் மக்கள் பனிச்சறுக்கு விளையாடும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.