பன்னீர் செல்வத்தை ஜீரோ பன்னீர் செல்வம் என்று தான் அதிமுகவின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அழைப்பார் என தமிழ்நாடு பாடலூல் நிறுவனத்தில் தலைவர் வளர்மதி கூறியுள்ளார்.
அதிமுகவின் ஒரே எதிரி யார் என்றால் அது திமுக கட்சிதான். தீயசக்தியாக விளங்கும் திமுக கட்சியை நாங்கள் அழிக்கவிருக்கிறோம்.
பன்னீர் செல்வம் போன்றவர்களை நாங்கள் எதிரியாக கூட நினைப்பது கிடையாது. ஏனெனில் அவர் ஒரு ஜீரோ பன்னீர் செல்வம். பதவி அரிப்பால் இதுபோன்று நடந்துகொள்கிறார்.
டீக்கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த அவரை முதலமைச்சராக்கியவர் எங்கள் அண்ணன் டிடிவி தினகரன்.
ஒரு டீக்கடைக்காரராக இருந்த உன்னை, அரசியலுக்குள் அழைத்து வந்து அம்மாவிடம் அறிமுகப்படுத்தி உனக்கு பதவி பெற்றுக்கொடுத்தார்.
அப்படியிருக்கையில் சின்னம்மா மற்றும் டிடிவி தினகரன் அவர்களை பற்றி பேசுவதற்கு பன்னீர் செல்வத்துக்கு என்ன யோக்கிதை இருக்கிறது என கூறியுள்ளார்.
பதவி சுகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக கட்சியை உடைக்க பார்க்கிறார் பன்னீர் செல்வம், ஆனால் இது ஒருபோதும் நடக்காது என கூறியுள்ளார்.