பம்பலப்பிட்டி வர்த்தகர் கடத்தல்! 15 வர்த்தகர்களிடம் விசாரணை

554

Abduction

பம்பலப்பிட்டியில் 29 வயதான இளம் வர்த்தகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.

காணாமல் போன வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள், வழக்குகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வர்த்தகருடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட நபர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. வர்த்தகர் கடத்தப்பட்ட இடத்தில் காணப்படும் சீ.சீ.ரீ.வி கமராக்களின் காட்சிகள் நேற்றைய தினம் கண்காணிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவ்வித உறுதியான தகவல்களையும் வெளியிட முடியாத நிலைமை காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

SHARE