பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா

313

 

பயங்கரவாதத்தில் ஈடுபட்டவர்களே சுதந்திரமாக சுற்றும் பொழுது அரசியல் கைதிகளை விடுவிப்பதில் தவறில்லை! பொன்சேகா

பங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டவர்களே வெளியில் சுதந்திரமாக நடமாடும் பொழுது வெறுமனே சாதாரண கைதிகளை அரசியல் கைதிகள் என்று அடைத்து வைத்திருப்பதில் எந்தப் பயனுமில்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை  தொடர்பாக அவர் தெரிவிக்கையில்,

நீண்டகாலமாக சிறைகளில் வாடும் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி தொடர்ச்சியாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றைனர்.

அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் மக்களும், மாணவர்களும், போராட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் அனைத்து அரசியல்  அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் அதில் எவ்வித சிக்கல்களும் கிடையாது என்றார்.

கடந்தக் காலங்களில் எமது நாட்டில் பயங்கரவாதிகளின் செயற்பாடுகளுக்கு முற்று முழுவதுமாக ஒத்துழைப்பு தந்த பெரும்பாலான உறுப்பினர்கள் இன்று சுதந்திரமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது வெறுமனே இவர்களை மட்டும் அரசியல் கைதிகளாக எந்த ஒரு விசாரணைகளும் இன்றி சிறைச்சாலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்றது எனவும் குறிப்பிட்டார்.

எமது நாட்டில் கடந்த காலங்களில் விடுதலை புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கையின் போது எமது இராணுவ வீரர்கள் தமது உயிரையும் பொருட்படுத்தாது எமது நாட்டை பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்தனர்.

இவ்வாறான நிலையில் விடுதலை புலிகளின் செயற்பாடுகளுக்கு நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்தவர்களும் கேபி என குறிப்பிடப்படும் குமரன் பத்மநாதன் உட்பட சில உறுப்பினர்கள் சுதந்திரமாக செயற்படும் போது இவர்களை மட்டும் எவ்வித விசாரணைகள் இன்றி நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சலைகளில் தடுத்து வைத்திருப்பதானது அர்த்தமற்ற செயல் என்றே குறிப்பிட வேண்டும்.

இதற்கு தீர்வாக அரசாங்கம் இவர்களை விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாயின் எந்தச் சிக்கலும் இல்லை என்றார்.

SHARE