இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடந்து ஏழாவது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிலையில் தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய போராளிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தேர்தல் காலங்களில் மட்டும் போராளிகளுக்காக குரல் கொடுத்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஏனைய அமைப்புக்களும் தற்பொழுது மௌனித்துச் செயற்படுகின்றது. குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவான், சிறீதரன், மாவைசேனாதிராஜா, சிவமோகன், சிவசக்தி ஆனந்தன் முன்னாள் பாராளுமன் உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் போன்றவர்களும், பாராளுமன்றத்திலும், பாராளுமன்றத்திற்கு வெளியேயும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள போராளிகளை விடுதலை செய்யுங்கள் என்று முழக்கமிட்டனர், அரசாங்கத்தை கண்ணாபின்னா என்று திட்டினர். இக்காரணங்களை முன்வைதே கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கம் கவில்க்கப்பட்டது.
ஆனால் தற்பொழுது இருக்கக் கூடிய மைத்திரியின் கூட்டாச்சியும் இதனையே செயற்படுத்துகின்றது. மைத்திரியினுடைய ஆட்சியில் எந்தவித அபிவிருத்தித் திட்டங்களும் மேற்கொள்ளப்படவில்லை. மஹிந்தவின் கடனைக் காட்டும் பாணியிலேயே அவர்கள் செயற்படுகின்றனர். அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவி;ட்டால் சாகுவரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக கொக்கரித்த செல்வம் அடைக்கலநாதனும் உண்ணாவிரம் இருக்கவில்லை. இந்த எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சவுக்கியமென தனது அரசியலை நடத்தி வருகின்றார் செல்வம் அடைக்கலநாதன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள பிரச்சனைகளை தீர்த்து வைக்கமுடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள். அரசியல் கைதிகள் விடுதலையில் எப்படிக் கவணம் செலுத்தப் போகின்றார்கள். தமிழினத்தின் விடுதலைக்காக போராடிய இவர்கள் நினைவு கூறப்படவேண்டியவர்கள். இன்னும் பல போராளிகள் தமது வாழ்வாதாரப் பிரச்சனையை எவ்வாறு கொண்டு செல்லப் போகின்றோம் என் பிரச்சினையில் இருக்கின்றார்கள். உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைப் பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளவேண்டும்.
எதிர்க்கட்சிப் பதவி மோகம் கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் பின்வாங்குவது ஏன்? என்ற கேள்வியும் எழுப்பப் படுகின்றது. ஜனநாயக வாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் இரா. சம்பந்தன் ஆயுதப் போராட்டம் ஆரம்பிப்பதற்கு அடி அத்திவாரமாக இருந்தவர்கள் இவர்களே. இதனுடைய வரலாறுகளை தற்பொழுது மூடி மறைக்கின்றார்கள். எது எவ்வாறாக இருப்பினும் தேர்தல்கள் காலத்தில் மட்டும் தமிழீழ விடுதலைப்புலிகளின் பெயரைப் பாவித்து வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தகைய செயற்பாட்டிலிருந்து விலக வேண்டும். உடனடியாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை முன்னெடுத்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கான நடவடிக்கைகளையும் இன்றைய எதிர்க்காட்சி மேற்கொள்ளவேண்டும் என்பதே எமது வேண்டுகோள்.