பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை:

314

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
அனைத்து இன சமூகங்களிற்கு இடையிலும் நம்பிக்கையை கட்டியெழுப்ப அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளது.
பயங்கரவாதத்தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.
கைது செய்யப்பட்ட தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அரசாங்கத்தின் நல்லாட்சி முயற்சிகள் வரவேற்கப்பட வேண்டியது என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
நல்லிணக்கத்தை ஏற்படுத்தல், குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மற்றும் மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் ஆகியன மிகவும் அவசியமானது என தெரிவித்துள்ளது.

SHARE