பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் அமைச்சர்களிடம் ஒப்படைப்பு?

191
பயங்கரவாதத் தடை திருத்தச் சட்ட யோசனைகள் உரிய அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டம் திருத்தி அமைக்கப்படவுள்ளது.

இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள உத்தேச திருத்தச் சட்ட யோசனை துறைசார் மூன்று அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக சட்டவாக்க ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோரிடம் இந்த உத்தேச சட்ட வரைவுத் திட்டம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அமைச்சர்களின் கோரிக்கைக்கு அமைய சட்டத் திருத்த யோசனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பொலிஸ் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் நாட்டுக்கு பொருத்தமான வகையிலும் உத்தேச சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என சட்டத்தரணி ரொமேஸ டி சில்வா கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

 

SHARE