பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பலி

94

 

பாகிஸ்தானில் பொலிஸ் நிலையம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் பரிதாபமாக உயிர்ழந்துள்ளனர்.

கைபர் பக்துன்குவா மாகாணத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தை அதிகாலை முப்பதுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தியதில் காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக விளங்கும் கைபர் பக்துன்குவா மாகாணத்தில் கடந்த வாரம் பாதுகாப்பு படையினர் 24 பயங்கரவாதிகளை சுட்டு கொன்றனர்.

இந்நிலையில் அதற்கு பழி வாங்குவதற்காக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SHARE