பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரியும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை சுயமாக ஜனநாயக பாதையில் ஈடுபட வழிவிடுமாறு கோரியும் மட்டக்களப்பில் அடையாள உண்ணாவிரத போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த உண்ணாவிரத போராட்டம் இன்று காலை முதல் மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பாக வெள்ளை உடை அணிந்து, வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மட்டக்களப்பு மாவட்ட உள்ளூராட்சிமன்ற உறுப்பினர்களின் ஒன்றியம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் நடத்தப்படும் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்பவற்றின் உறுப்பினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன்போது, பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கி முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இது ஆரம்பக்கட்ட போராட்டம் எனவும், இந்த போராட்டம் தொடர்ச்சியாக வேறு வகையில் முன்னெடுக்கப்படும் எனவும் இங்கு போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் எச்சரிக்கைவிடத்துள்ளனர்.