பயங்கரவாத்த தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் கணபதிப்பிள்ளை குக்குமாரராஜா மற்றும் அவரது மகன் ஜனோஜன் ஆகிய இருவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் மட்டக்களப்பு தரவையில் கடந்த நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் நாள் நினைவேந்தல் ஏற்பாடுகளில் ஈடுபட்டிருந்தபோது பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இரண்டரை மாதங்களாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இன்று(08.02.2024) மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றத்தினால் இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களை கட்சியின் அமைப்பாளர் தர்மரெட்ணம் சுரேஷ் நீதிமன்றத்தில் இருந்து அழைத்துச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.