பயணிகள் போக்குவரத்து அதிகாரசபைக்கு புதிய நியமனம் வழங்கப்பட்டது

207

வடக்கு மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் செயற்குழு அங்கத்தவராக ஏலவே நியமிக்கப்பட்டிருந்த வடக்கு மாகாண முன்னாள் உள்ளூராட்சி ஆணையாளர் பி.குகநாதன் அவர்கள் மாகாண காணி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டமையால் புதிய மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக பதவியேற்றுள்ள எம்.பற்றிக் டிறஞ்சன் அவர்கள் இன்று வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் உத்தியோகபூர்வமாக அதிகாரசபையின் செயற்குழு உறுப்பினராக நியமனக்கடிதத்தைப் பெற்றுக்கொண்டார். இவ் நிகழ்வு 28-04-2017 காலை 11:30 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் நடைபெற்றது.

SHARE