பரபரப்பான இரவு வாழ்க்கையை இழந்துள்ளதா லண்டன்?

226

london

உலக அளவில் இரவு கேளிக்கை அம்சங்களில் பலராலும் விரும்பப்பட்ட லண்டன் நகரம், அந்நிலையிலிருந்து தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் லண்டன் மாநகர மேயர் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள ஃபேப்ரிக் இரவு விடுதியின் உரிமத்தினை ஒரு உள்ளூர் நகர சபை திரும்பப் பெற்றதற்கு பின்னர், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

பலரையும் ஈர்க்கக் கூடிய உலகின் மிக முக்கிய நடன கேளிக்கை மையங்களில் ஒன்றாக ஃபேப்ரிக் இரவு விடுதி கருதப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில், லண்டனில் உள்ள இரவு விடுதிகளில் பாதியளவும், நேரலை இசை நிகழ்ச்சிகள் நடத்தும் 40 சதவீத மையங்களும் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

துடிப்பான இரவு வாழ்க்கை கொண்ட 24 மணி நேரமும் பரபரப்பான நகரம் என்ற தனது முந்தைய நிலையை லண்டன் மாநகரம் தக்க வைக்க வேண்டுமானால், இரவு விடுதிகள் மூடப்பட்டு வரும் இந்த சரிவு நிலை உடனடியாக நிறுத்தப்பட வேண்டுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

SHARE