நடிகை தீபிகா படுகோன், ரன்வீர் சிங் ஜோடியாக நடிப்பில் உருவாகியுள்ள படம் பத்மாவதி. வரலாற்று சம்மந்தப்பட்ட சில விசயங்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக பெரும் சர்ச்சைகள் வெடித்தது.
இதனால் படத்திற்கு தடை வந்தது. சில நிபந்தனைக்கு பின் படத்திற்கு சென்சார் வழங்கப்பட்டு படம் வெளியிட அனுமதி வழங்கினாலும் குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஹரியானாவில் தடை இருந்தது.
இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. தடை முழுவது விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.