பரவிப்பாஞ்சான் மக்களின் அவல நிலை! மக்கள் தமது குழந்தைகளுடன் வீதியில்!

244

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது சொந்த வாழ்விடத்திற்கான போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்துள்ளது.

பரவிப்பாஞ்சான் மக்களது வீடுகளில் இராணுவத்தினர் உல்லாசமாக இருக்க, அந்த வீடுகளின் சொந்த மக்கள் தமது குழந்தைகளுடன் வீதியில் அவலப்படுகின்றார்கள்.

பரவிப்பாஞ்சானில் காலங்காலமாக வாழ்ந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர்.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (2)

நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள போதிலும் மக்களிடம் காணிகள் கையளிக்கப்படாத நிலையில் தமது சொந்த காணிகளை மீளவும் வழங்க வேண்டும் என கோரி பரவிபாஞ்சான் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னரும் பல தடவைகள் இம்மக்கள் தமது சொந்த நிலங்களைத் தம்மிடம் வழங்குமாறு கோரி தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தனர்.

அதன் போது இராணுவ உயரதிகாரி உள்ளிட்ட பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் பரவிப்பாஞ்சான் மக்களது காணிகள் விரைவில் மக்களிடமே கையளிக்கப்படவுள்ளதாக வாக்குறுதி அளித்தனர்.

எனினும், இதுவரை மக்களது வாழ்விடங்கள் மக்களிடம் கையளிக்கப்படாதமையால் நேற்று முன்தினம் முதல் பரவிப்பாஞ்சான் மக்கள் மீண்டும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

625.0.560.320.160.600.053.800.668.160.90 (3)

SHARE