பரிசுத்த பாப்பரசர் அவர்களின் மடுத் திருத்தல வருகையை முன்னிட்டு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய பிரதான வீதிகள் அனைத்தும் துரித கதியில்புனரமைக்கப்பட்டுள்ளதை நேரில் சென்று பார்வையிட்டார் – வடமாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர்.

403

பரிசுத்த பாப்பரசர் அவர்களின் மடுத்திருத்தல வருகையை முன்னிட்டு திருத்தலத்துக்கு செல்லக்கூடிய பிரதான வீதிகளான பிரமனாலங்குளம் – மடு, தட்சனாமருதமடு, மடு – பரப்புக்கடந்தான், மடு – மடுச்சந்தி ஆகிய வீதிகள் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்;க 03.01.2015 அன்று துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு நிறைவுபெறும் நிலையில் 12.01.2015 திங்கள் காலை மடுத்திருத்தலத்துக்கு விஜயம் செய்த வடக்குமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராம அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், வீதி அபிவிருத்தி மற்றும் மோட்டார் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன் அவர்கள் சகல வீதிப்புனரமைப்பு பணிகளையும் நேரில் சென்று பார்வையிட்டதோடு, மிகுந்த ஊக்கத்தோடு உழைத்த வீதி அபிவிருத்தி அதிகார சபையினர் மற்றும் வீதி அபிவிருத்தி திணைக்களம் ஆகியவற்றின் தலைவர்கள், பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

WP_20150112_011   WP_20150112_034

SHARE