களுபோவில போதனா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய ‘பயிலுனர் சட்டவைத்திய அதிகாரி பயிற்சிகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
களுபோவிலை வைத்தியசாலையின் பணிப்பாளர் அசேல குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
இந்த பயிலுநர் ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் பயின்ற பின்னர் உள்ளகப் பயிற்சிக்காக களுபோவில வைத்தியசாலையில் பணியாற்றிவந்தார்.
குறித்த தினத்தில் காதலன் ஒருவரால் தாக்கப்பட்டு பரிசோதனைக்காக வந்த பெண் ஒருவரை குறித்த பயிலுநர் சட்டவைத்திய அதிகாரி, பெண் தாதியின் உதவியின்றி சோதனையிட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த பெண், பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.