பரீட்சை முறைகேடுகளை தவிர்க்கும் நடவடிக்கை

171

அனைத்து பரீட்சை மத்திய நிலையங்களிலும் மேலதிக நிலைய பொறுப்பதிகாரியொருவரை நியமிக்க பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பீ பூஜித இது தொடர்பில் தெரிவிக்கையில்,

பரீட்சை முறைகேடுகளை தவிர்க்கும் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 06 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளதுடன் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி நிறைவடையவுள்ளது.

இம்முறை உயர்தரப்பரீட்சையில் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் 21 ஆயிரத்து 469 பேர் தோற்றவுள்ளனர்.

2267 பரீட்சை மத்திய நிலையங்கள் மற்றும் 311 ஒருங்கிணைப்பு மையங்களில் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ளதுடன் சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலம் மூன்று லட்சத்து 55 ஆயிரத்து 326 மாணவர்கள் பரீட்சையில் தோற்றவுள்ளனர்.

SHARE