“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் 7 பேரை விடுவிக்கத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம்: கருணாநிதி

292

“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் தான், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லையா? என திமுக தலைவர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

karuna9

திமுக தலைவர் கருணாநிதி கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை நேற்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

கேள்வி :- நளினிக்கு வழங்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது தி.மு. கழக ஆட்சியில். ஆனால் இந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவருக்கு “பரோல்” கூட வழங்க முன்வருவதில்லையே?

கருணாநிதி:-  நளினியின் தந்தை உடல் நிலை மோசமானதை அடுத்து, ஒரு மாத காலமாக “பரோல்” கேட்டுப் போராடியதாகவும், ஆனால் கிடைக்கவில்லை என்றும், அவர் இறந்த பிறகுதான் பரோல் கிடைத்தது என்றும் நளினியே ஒரு இதழ் பேட்டியிலே குறிப்பிட்டிருக்கிறார்.

தற்போதுகூட நளினி தந்தையின் 16வது நாள் சடங்குக்காக 3 நாள் பரோல் கேட்டதாகவும், ஆனால் தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு நாள் மட்டுமே பரோலில் செல்ல சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததாம்.

“பரோல்” வழங்குவதற்கே தயங்குபவர்கள் தான், அவர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்யத் தீர்மானம் போட்டிருக்கிறார்களாம். வேடிக்கையாக இல்லையா? உயிர்ப் பிரச்சினையிலும், வேஷம்தானா? இவ்வாறு கூறியுள்ளார்.

 

SHARE