துரித உணவுகளில் ஒன்றான பர்கர் இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
அந்த உணவால் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறினாலும், மக்கள் திருந்தியபாடில்லை.
அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர், மிகுந்த காரம் கொண்ட சிவப்பு மிளகாயினால் செய்யப்பட்ட பர்கரை சாப்பிட்டதால் அவரது தொண்டை ஓட்டையாகியுள்ளது.
ஆசையாக பர்கரை வாங்கி சாப்பிட்ட அவரது தொண்டையும், காரத்தின் மிகுதியால் வயிறும் தீயாக எரிந்துள்ளது.
இதனை தாங்கிகொள்ள முடியாமல் மயங்கி விழுந்த அவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மிளகாயின் அதிக காரம் அவரது தொண்டையை அரித்து புண்ணாக்கி, ஓட்டைவிழும் அளவுக்கு சென்றுள்ளது.
தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் வரும் இவருக்கு டியூப் மூலம் உணவளிக்கப்படுகிறது.
இந்த பர்கரில் சேர்க்கப்பட்டுள்ள மிளகாய் உலகின் மிகவும் காரமான மிளகாயான பூட் ஜொலோகியா ஆகும்.
பூட் ஜொலோகியாவின் கார அளவு 10,01,304 SHU ஆகும்.