பறக்கும் தட்டு குறித்த உண்மையை வெளியிடுவாரா ஒபாமா?

288

20-1421749661-6

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் பறக்கும் தட்டு குறித்த மர்மத்தினை வெளிப்படுத்துவதற்கு ஒபாமா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் பதவி வகித்த ஜனாதிபதிகளும், ஜனாதிபதி வேட்பாளர்களும் பறக்கும் தட்டு குறித்து விவாதிப்பது தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகிறது.

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் ஹிலாரி கிளிண்டன், நான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால் பறக்குத் தட்டு குறித்த உண்மையை வெளிப்படுத்துவேன் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்,

அமெரிக்காவில் கடந்த 1950 ஆம் ஆண்டு முதலே பறக்குத் தட்டு குறித்த புகைப்படங்கள், அறிக்கைகள் தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

இதில், ஒன்றான Behind Area 51(பூமியில் மறைந்து கிடக்கும் மர்மங்கள்) பற்றி உண்மைகளை கண்டறிந்து வெளிப்படுத்துவேன் என ஹிலாரி சமீபத்தில் கூறினார்.

இந்நிலையில், பறக்கும் தட்டு குறித்த உண்மையை ஒபாமா வெளிப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது,

இதுகுறித்து அமெரிக்காவில் செயல்பட்டு வரும் Paradigm Research Group (PRG) – யின்நிர்வாக இயக்குனர் StephenBassett கூறியதாவது, இது ஒரு பாரிய அறிவிப்பு என நம்புகிறோம்.

இந்த வருடத்தில் பறக்கும் தட்டுகுறித்த உண்மை வெளியானால், உலக அளவில் அனைத்து செய்திதாள்களிலும் இந்த செய்தி வெளியாகும், இந்த ஆண்டு நாம் மறைந்திருக்கும் உண்மையை தெரிந்துகொள்ளப்போகிறோம்.

நடக்கவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் யார் வெல்லப்போகிறார் என்பதை உறுதியாக சொல்லமுடியாது, ஆனால் உண்மையை வெளிப்படுத்திய ஜனாதிபதியாக ஒபாமா இருப்பார் என்பதை உறுதியாக சொல்ல இயலும்,

நோபல் பரிசினை கருத்தில் கொண்டு ஒபாமா இதனை அறிவித்துள்ளார், வெள்ளை மாளிகையைவிட்டு வெளியேறுவதற்குள் இதனை ஒபாமா செய்துவிடுவார் என்பதை 85 சதவீதம் உறுதியாக சொல்லலாம்.

இதற்கு அடுத்த சில நாட்களில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனும் இந்த விவாதத்தை கையில் எடுக்கலாம் என கூறியுள்ளார்.

SHARE