பறக்கும் விமானத்தில் களைகட்டிய தமிழ், சிங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள்!

521

இலங்கையில் தமிழ், சிங்கள் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களை கட்டியுள்ளன.

இந்நிலையில் இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்காக பறக்கும் விமானத்திலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்டியிருந்தன.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் பயணித்த தமிழ் பயணிகள் உட்பட அனைவருக்கும் அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், கலாச்சார உணவுகளும் வழங்கப்பட்டன.

கட்டுநாயக்க விமான நிலையத்திலும் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டங்களில் பெருமளவு வெளிநாட்டு பயணிகள் கலந்து கொண்டனர்.

விமானம் பறந்து கொண்டிருக்கும் போதும் ஸ்ரீலங்கன் விமான சேவை ஊழியர்களினால் புத்தாண்டு கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பங்கேற்ற வெளிநாட்டு பயணிகள் மகிழ்ந்து அடைந்துள்ளதுடன், இலங்கை மக்களுக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்

SHARE