பறந்துகொண்டிருந்த விமானத்தில் 50க்கும் அதிகமானவர்கள் காயம்

103

 

பயணித்துக்கொண்டிருந்த லட்டம் எயர்லைன்ஸ் விமானத்தில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் சிட்னியிலிருந்து நியுசிலாந்தின் அவுக்லாண்ட்டிற்கு சென்று கொண்டிருந்த லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. லட்டம் எயர்லைன்ஸ் விமானத்திலேயே தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு
விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது இதனால்; விமானம் தடுமாறத்தொடங்கியதாக லட்டம் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விமானம் அவுக்லாண்டில் தரையிறங்கியதும் பயணிகள் தயார் நிலையில் நின்ற அம்புலன்ஸில் அவசரஅவசரமாக ஏற்றப்பட்டனர்.

எங்கள் அம்புலன்ஸ் சேவையை சேர்ந்தவர்கள் பயணிகளை உடனடியாக மருத்துவபரிசோதனைக்கு உட்படுத்தியதாகவும் விமான பயணிகள் 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஒருவர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஹட்டோ ஹோன் சென்ஜோன்ஸ் அம்புலன்ஸ் சேவை தெரிவித்துள்ளது.

SHARE