பலத்த காற்றினால் வீடுகள் சேதம் ; போக்குவரத்தும் பாதிப்பு

145

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக சிலாபம், ஆனமடுவ உள்ளிட்ட பகுதிகளில் வீசிய பலத்த காற்றினால் பல வீடுகள் சேதமடைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் ஏ.எம்.ஆர். ஆழகக்கோன் தெரிவித்துள்ளார்.

மேலும் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் இன்று அதிகாலை முதல் முறிந்து வீழ்ந்த மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதால்  தடைப்பட்ட ஆனமடுவ மற்றும் பங்கதெனிய பகுதிக்கான போக்குவரத்து வழமைக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், பலத்த காற்றினால் சுமார் 7,500 குடும்பங்களுக்கான மின்சார விநியோகமும் தடைப்பட்டுள்ளதாகவும் அனர்த்த இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவத்துள்ளது.

SHARE