யாழ்ப்பாணம் மணற்காடு அந்தோனியார் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆலய முகப்பு திறப்பு விழாவிற்கு பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
திறப்பு விழா நேற்று புதன்கிழமை (01) மாலை 5.00 மணியளவில் இடம்பெற்றது.
பங்கு தந்தைகளை தவிர பொது மக்கள் அனைவரும் உடற்சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டே ஆலயத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
இது தவிர மோப்பநாய் கொண்டு சோதனை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இராணுவத்தினர் , பொலிஸார், விஷேட அதிரடிப்படையினர், புலனாய்வுப் பிரிவினர் ஆகியோரால் கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தன..
குறித்த திறப்பு விழாவிற்கு பிரதமவிருந்தினராக கலந்து கொண்ட யாழ் மாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து சிறுமிகளின் நடனத்துடன் அழைத்து வரப்பட்டதைத் தொடர்ந்து ஆலய முகப்பு திறந்து வைக்கப்பட்டது.