பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திய பாதிரியாரின் செயல்

207

ரஷ்யாவில் இரண்டு வயது குழந்தைக்கு ஞானஸ்தானத்தின் போது, பாதிரியாரின் செயல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவில் தன்னுடைய இரண்டு வயது குழந்தையை ஞானஸ்தானம் பெறுவதற்காக தாய் ஒருவர் அழைத்துச் சென்றுள்ளார்.

அப்போது அங்கிருந்த பாதிரியார் ஞானஸ்தானத்தின் போது, அங்கிருக்கும் புனிதமான தண்ணீர் என்று கூறப்படும் அதில் தலையை பிடித்து அதிவேகமாக இரண்டு, மூன்று முறை அழுத்துகிறார்.

இதனால் குழந்தை பயத்தில் அழுகிறது. ஆனால் அந்த குழந்தையின் தாயோ ஏதும் சொல்லாமல் இருக்கிறார்.

இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானதால், பலரும் அந்த பாதிரியாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் அந்த குழந்தையின் தாய் இது குறித்து எந்த ஒரு புகாரும் அளிக்கவில்லை எனவும், என் மகள் ஞானஸ்தானம் அடைந்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

தொடர்ந்து கூறிய அவர், குழந்தை பிறக்கும் போது நன்றாக பிறக்கும், ஆனால் குழந்தைகள் வளர்ந்தவுடன் சாத்தான் குழந்தைகளிடம் ஒட்டிக் கொள்வார்கள், இப்படி செய்யும் போது, சாத்தன் விரட்டப்படுவார் என்று கூறியுள்ளார்.

இருப்பினும் பாதிரியாரின் இந்த செயல் மோசமாக உள்ளது என்று கூறப்படுவதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

SHARE