பலவருடங்களுக்கு பின் சிறப்பாக இடம்பெற்ற தீமிதிப்பு நிகழ்வு

205

100வீதம் இஸ்லாமியர்கள் வாழும் சம்மாந்துறையில் அமைந்து அருள்பாலித்துக்கொண்டிருக்கின்ற வரலாற்றுப்பிரசித்திபெற்ற பத்ரகாளியம்பாள் ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு வைபவம் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் சிறப்பாக இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் 800 ஆண்பெண் தேவாதிகள் ஆலய பிரதமபூசகர் மா.சதாசிவம் தர்மகர்த்தா எஸ்.சுப்பிரமணியம் முன்னிலையில் தீமிதிப்பில் ஈடுபட்டதுடன், பலருக்கு சாட்டையடி நிகழ்வும் இடம்பெற்றது.

எனினும் வெளிநாட்டில் இருந்தும் பல பக்த அடியார்கள் தீமிதிப்பு நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

முன்னர் பல நூற்றுக்கணக்கான தமிழ் குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவந்தன. எனினும் சில முரண்பாடுகளுக்கு பின்பு அவர்கள் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு காரைதீவு மற்றும் வெளிநாடுகளில் தஞ்சமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE